தர்மபுரி-அரூர் சாலையில் அதிக வாகனங்கள் செல்லும் போக்குவரத்து நிறைந்த சாலையாக உள்ளது. இந்த சாலையில் சோலைகொட்டாய், குரும்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் தடுமாற்றத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலைகளில் சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.