மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பஞ்சாயத்து களிகாப்பன் கிராமம் முதல் பிட் பகுதியில் கடந்த சில வருடங்களாக கே.ஆர்.கே. கார்டன் தெருமுதல் களிகாப்பன் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. வாகனஓட்டிகள் இந்த சாலை வழியாக செல்லும்போது கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் வேண்டி இப்பகுதியில் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.