தேனி மாவட்டம் வருசநாடு அருகே முருக்கோடையில் இருந்து வாழவந்தான்புரம் வரை தார்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. சாலையில் ஜல்லி கற்கள் பரப்பிய நிலையில் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டன. தற்போது சாலை முழுவதும் கற்கள் பரவி கிடப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும்.