பண்ருட்டியில் இருந்து பணிக்கன்குப்பம் அரசு பொறியியல் கல்லூரி செல்லும் கும்பகோணம் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். ஆகவே சேதமடைந்துள்ள இந்த சாலையை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.