திண்டுக்கல் அருகே உள்ள கொட்டப்பட்டியில் இருந்து பழனி சாலை வரை 13 இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. இதனால் ஆம்புலன்ஸ் வாகனம் கூட வேகமாக வரமுடியவில்லை. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். ஒருசில இடங்களில் இருக்கும் வேகத்தடைகளை அகற்ற வேண்டும்.