குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-17 14:53 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, ஊட்டத்தூர் செல்லும் சாலையில் தெற்குப் பகுதியில் பாடாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட புற நோயாளிக வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மருத்துவமனைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்