தர்மபுரி நகராட்சி அண்ணாமலை கவுண்டர் தெரு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த கான்கிரீட் சாலை சேதமடைந்து பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.