சேலம் சின்னத்திருப்பதி காமராஜர் நகர் 2 -வது தெருவில் சிலர் சாலையை ஆக்கிரமித்து செடி, கொடிகள் வளர்க்கின்றனர். இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் குழந்தைகள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மேலும் அந்த பகுதியில் புதிதாக பாலம் கட்டப்பட்டது. இதனால் அங்கு மண் மலைபோல் குவிந்து கிடக்கிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை ஆக்கிரமிப்பையும், மண் குவியலையும் அகற்ற வேண்டும்.