பழனி அருகே தும்பலப்பட்டியில் இருந்து மரிச்சிலம்பு செல்லும் சாலை சேதம் அடைந்து முற்றிலும் உருக்குலைந்து விட்டது. சாலை முழுவதும் கற்கள் பரவி கிடப்பதோடு, குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், கிராம மக்களும் பெரும் சிரமம் அடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.