திண்டுக்கல் நாகல்நகரில் இருந்து பஸ் நிலையம் செல்லும் மெங்கல்ஸ் ரோட்டில் பள்ளிக்கூடம் அருகே சாலை சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக அந்த சாலையில் 2 இடங்களில் அபாய பள்ளங்கள் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.