கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நடுக்கூடலூர் பகுதியில் பல ஆண்டுகளாக தார் சாலை உடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதை புதுப்பித்து தர வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.