கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணியின் போது பல இடங்களில் தரைப்பாலம் பதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தொடர் கனமழை பெய்ததால் பாலம் இருக்கும் இடங்களில் பெரிய பள்ளங்கள் தோன்றியுள்ளது. இதனால் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளங்களில் இறங்கி செல்லும்போது சேதம் அடைகிறது. இதை அறியாத வெளியூர் சுற்றுலாப் பயணிகள் இரவில் தங்களது ஊருக்கு திரும்பி செல்லும் போது ஆபத்தான பள்ளங்களை அறியாமல் வாகனங்களை ஓட்டும் ஓட்டுகின்றனர். இதனால் வாகன விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சமநிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிராஜுதீன், கூடலூர்.
சிராஜுதீன், கூடலூர்.