விழுப்புரம் சாலாமேடு புகாரி நகர் பகுதியில் உள்ள தார் சாலைகள் சேதமடைந்து தற்போது மண் சாலையாக மாறியுள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலை மிகவும் சேறும், சகதியுமாக மாறி வயல்வெளிபோல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் உடனடியாக புதிய தார்சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.