நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரிக்கு செல்லும் சாலையில் அம்பலம் என்னும் ஊர் உள்ளது. அந்த ஊரில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.