திருவள்ளூர் மாவட்டம் நகராட்சி அலுவலகம் எதிரே இருக்கும் 60 அடி சாலை வி.எம். நகர், ஜே.ஜே. தெருவின் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. இதனால் மழை நீர் எளிதில் ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படுவதோடு வாகனத்தில் செல்லும் மக்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அரங்கேற்குகிறது. மோசமான நிலையில் இருக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கை.