கோவை சவுரிபாளையம் கார் வீதி சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து காயம் அடையும் நிலை காணப்படுகிறது. தற்போது அங்கு பொதுமக்கள் தடுப்பு வைத்து அடைத்து உள்ளனர். நீண்ட நாட்களாக அந்த தடுப்பு அப்படியே உள்ளது. திறந்த நிலையில் கிடக்கும் சாக்கடை கால்வாய் மூடப்படவில்லை. எனவே உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.