வேடசந்தூரில், பழனி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வேடசந்தூர் நகருக்குள் வராமல் திண்டுக்கல் செல்வதற்கு நான்கு வழிச்சாலையின் ஓரத்தில் சர்வீஸ் சாலை உள்ளது. ஆனால் இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சர்வீஸ் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.