ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் காத்தாடி மட்டம், பிக்கோள் ஆகிய பகுதிகளில் சாலையோரம் சிறிய அளவில் தடுப்பு சுவர் கட்டப்படுகிறது. இதற்காக கட்டுமான பொருட்கள் சாலையில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த சாலையில் விபத்து அபாயம் இருப்பதால் கட்டுமான பொருட்களை சாலையோரம் கொட்டி வைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.