தர்மபுரி-பென்னாகரம் சாலையில் 4 ரோடு முதல் குமாரசாமிபேட்டை ரெயில்வே மேம்பாலம் தொடங்கும் பகுதி வரை உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சுமார் 1 கி.மீ. உள்ள இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றன. மிக அதிக வாகன போக்குவரத்து கொண்ட அந்த சாலையை சாலையை சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.