விக்கிரவாண்டியில் இருந்து கீழ்நந்திவாடி-தென்பேர் செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுளுக்கு முன்பு போடப்பட்டது. ஆனால் தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் மேற்கண்ட கிராமங்களில் இருந்து விக்கிரவாண்டிக்கு வரும் பள்ளி மாணவ-மாணவிகள், மற்றும் அரசு அலுவலங்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வந்து செல்ல கடும் சிரமப்படுகின்றனர். எனவே மேற்கண்ட சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.