குண்டும் குழியுமான சாலை

Update: 2022-06-18 14:29 GMT
திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரெயில் நிலையத்தில் இருந்து அரண்வாயல் பாலம் வரை செல்லும் சாலையானது குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் இந்த சாலை மிகவும் குருகலாக உள்ளதால் தற்போது போக்குவரத்து அதிகமாக உள்ளது. ஒரு வாகனம் செல்லும்போது, எதிர்வரும் வாகனம் சிரமப்பட்டு கடக்கும் சூழல் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சாலையை சீரமைக்கவும், அகலப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்