சாலையை சரி செய்ய வேண்டும்

Update: 2022-08-11 16:17 GMT
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி தாலுகா பெரமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட நத்தமேடு பகுதியில்  சிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பனமரத்துப்பட்டியில் இருந்து இந்த கோவிலுக்கு செல்வதற்கான தார் சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமல்லாமல் அந்த வழியாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும், வேலைக்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்