போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-11 13:39 GMT

கோவை கிராஸ்கட் ரோடு 8-வது வீதி சந்திப்பு பகுதியில் பல நாட்களாக பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. அங்கு குழி தோண்டப்பட்டு உள்ளதோடு கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்