மக்கள் அவதி

Update: 2022-06-15 12:03 GMT
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் உள்ள அத்திப்பேடு கிராமத்தில் புதிதாக பாலம் ஒன்று கட்டப்பட்டது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சாலையில் பயணிக்கும் பஸ்கள் பாலத்திற்கு மேலேயே சென்றுவிடுகிறது. பாலத்தின் கீழே எங்கள் கிராமம் இருப்பதையே மறந்துவிட்டார்கள். எங்கள் கிராமத்திலிருந்து பள்ளி செல்லும் குழந்தைகள், மற்றும் பணிக்காக மற்ற ஊர் செல்லும் மக்கள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். சம்பந்தபட்ட அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்