பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு நகரின் முக்கிய சாலையாகும். இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் மகாலிங்கபுரம் நகராட்சி சர்க்கஸ் மைதானத்தில் இருந்து நியூஸ்கீம் ரோடு சந்திப்பில் சாலையில் நடுவில் பெரிய குழி உள்ளது. இதில் வாகன ஓட்டிகள் சிக்கி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படும் முன் ஆபத்தான குழியை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.