தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு செல்லும் இருவழி சாலை தர்மபுரி- சேலம் சாலையில் இருந்து பிரிகிறது. இந்த சாலையை ரெயில் நிலையத்திற்கு செல்வோர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். குண்டும், குழியுமாக மாறிய இந்த சாலையை சீரமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.