திருவள்ளூர் மாவட்டம் சென்னீர்குப்பம் பகுதியிலுள்ள பள்ளிக்குப்பம் கிராமத்தில் உள்ள சாலை குண்டும் குழியுமாக இருப்பதுடன் மோசமாக காட்சி தருகிறது. இதனால் இந்த பள்ளத்தில் கழிவுநீர் தேங்குவதும் வாடிக்கையாகி வருகிறது. இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதால், குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.