நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடைதெருவில் நான்கு சாலைகள் பிரியும் இடத்தில் வேகத்தடை இல்லை. இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். மேலும், வேகத்தடை இல்லாததால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?