தர்மபுரி நகர பகுதியில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சாலையில் செல்லும் பல வாகனங்களில் இருந்து கரும்புகை அதிக அளவில் வெளியேற்றி செல்கின்றன. இதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் சாலையில் செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தீர்வு காண வாகனங்களுக்கு புகை பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலைகளில் அதிக கரும்புகையை வெளியிடும் வாகனங்கள் மீது விதிமுறைப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வன், தர்மபுரி.
-செல்வன், தர்மபுரி.