குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-08 14:22 GMT

கரூர் மாவட்டம், புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே நன்செய் புகழூர் செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் தார் சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக உள்ளது. இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் குழி இருப்பது தெரியாமல் வாகனத்தை அதில் விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்