இருளில் மூழ்கும் பாலம்

Update: 2022-08-08 14:17 GMT
தர்மபுரி கடகத்தூர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் வழியாக பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, ஓசூர்,தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் பெரும்பாலும் எரிவதில்லை. இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் மேம்பாலம் இருளில் மூழ்கி காணப்படுகிறது. மேம்பாலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவில் மின்விளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில், தர்மபுரி.

மேலும் செய்திகள்