கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு 960 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சேலம்-கரூர், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு இந்த 2 சர்வீஸ் சாலைகள் வழியாக தனியார் மற்றும் அரசு பஸ்கள், ஏராளமான லாரிகள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என இருபுறமும் சென்று வருகின்றன. சர்வீஸ் சாலை மிகவும் அகலம் குறைவாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.