குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-08 13:54 GMT
கிருஷ்ணகிரி நகராட்சி கோஆபரேட்டிவ் காலனி 2-வது கிராஸ் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன . இந்த பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. ஆஸ்பத்திரிகள், வணிக நிறுவனங்கள் , குடியிருப்புகள் அமைந்துள்ள இந்த சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் . பழுதடைந்த இந்த சாலையில் வாகனங்களை ஓட்ட வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் விபத்துகளும் நடக்கின்றன . எனவே பழுதான இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் .
-சவுமியா, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்