நாகை மாவட்டம் திருமருகல் பகுதி திருவாசல் கிராமத்தில் உள்ள சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து செல்லும் ஆட்டோக்கள், வேன்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சேறும்,சகதியுமான சாலையினால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?