தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரம் பஞ்சாயத்து திரவியநகர் சுடுகாட்டு பாதை முழுவதும் முள்செடிகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் சடலங்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, முள்செடிகளை அகற்றி சாலை வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.