புகாா் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-08-08 10:32 GMT

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருந்து கிழக்கு நோக்கி வரும் சாலையில், நம்பியாற்றை கடந்து நான்கு வழிச்சாலையாக பிரியும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும், அங்கு வேக்ததடை அமைக்க வேண்டும் எனவும் தோப்புவிளையை சேர்ந்த வாசகர் பிச்சை, 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக அங்கு வேகத்தடை அமைக்கப்பட்டு, அதன் மீது வர்ணமும் பூசப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி"க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்