கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா குமராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை ஏற்றி செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.