ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையத்தில் இருந்து மணிக்கூண்டு வரை செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழுதாகி விடுகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மழை பெய்யும்போது சாலை மேலும் மோசமாகிவிடுகிறது. இதனால் அவ்வபோது விபத்துகளும் நடக்கிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.