மேல்மலையனூர் அருகே சாதம்பட்டியில் இருந்து கொசப்பாளையம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை பலத்த சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.