கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் இருந்து புகழூர் காகித ஆலை செல்லும் தார்சாலை போடப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தரமற்ற தார் சாலை போடப்பட்டதால் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதை அவ்வப்போது சீரமைத்தும் சரியாக சீரமைக்காததால் ஆங்காங்கே தார் சாலையில் விரிசல் ஏற்பட்டு பெரிய பெரிய குழியாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.