திண்டுக்கல் அறிவுத்திருக்கோவில் பகுதியில் மெயின்ரோட்டில் இருந்து ரோஜாநகருக்கு திரும்பும் இடத்தில் தெருவின் குறுக்கே செல்லும் சாக்கடை பாலம் சேதம் அடைந்து விட்டது. பாலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளதால், அதை கல் போட்டு மறைத்து உள்ளனர். விபத்து ஏற்படும் முன்பு சாக்கடை பாலத்தை புதிதாக கட்ட வேண்டும்.