திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடி பாலம் எதிரில் சாலையோரம் பெரிய புளியமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தினால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக வேகமாக செல்லும் கார்கள் புளியமரத்தில் மோதி விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையோரத்தில் விபத்து பகுதி என எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?