கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் கனரக வாகனங்கள் வேகமாக ெசல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அச்சத்துடன் செல்கிறார்கள். மேலும் சாலை குண்டும், குழியுமாக கிடப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கனரக வாகனங்கள் வேறு வழியில் செல்ல வழிவகை செய்யவும், சாலையை சீரமைக்கவும் வேண்டுகிறேன்.