மண் குவியலால் விபத்து

Update: 2022-08-06 11:14 GMT
விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் வழியாக புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ராகவன்பேட்டையில் இருந்து கோலியனூர் கூட்டுசாலை வரை விபத்தை தடுக்கும் வகையில் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புச்சுவரின் இருபுறங்களிலும் மண் குவிந்துள்ளது. இதனால் காற்றில் புழுதி பறப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே அந்த மண் குவியலை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்