மானூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நரசிங்கநல்லூர் கிராமம் இந்திராகாலனி தெருவில் 1 ஆண்டுக்கு முன்பு ஜல்லிகற்கள், மணல் கொண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணி தற்போது பாதியில் நிற்கிறது. இதனால் ஏற்கனவே போடப்பட்ட ஜல்லிகற்கள் ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?