கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையால் பல்வேறு பகுதிகளில் சாலை சேதமடைந்துள்ளது. குறிப்பாக குந்தாரப்பள்ளியில் இருந்து வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் சாலையில் பள்ளம் பள்ளமாக காணப்படுகிறது. மேலும் எமக்கல் நத்தம் மலை கிராமத்திற்கு செல்லும் சாலையும் ஆங்காங்கா குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பெருமாள் , வேப்பனப்பள்ளி .
-பெருமாள் , வேப்பனப்பள்ளி .