சாலையின் நடுவில் அபாய குழி

Update: 2022-08-05 10:26 GMT

திருப்பூர் லட்சுமிநகர் கிழக்கு விரிவு பிரதான சாலையில் பாதாள சாக்கடை மேல் போடப்பட்ட கான்கிரீட்டில் பெரிய குழி ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு குழி இருப்பது தெரிவது இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். எனவே இந்த குழியை உடனே சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்