திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம், எம்.ஜி.ஆர். நகர் 1-வது தெருவிற்கு சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் இந்த சாலையில் பயணம் செய்வதற்கு சிரமப்படுகிறார்கள். மேலும் மழை காலங்களில் எங்கள் தெருவில் தண்ணீர் தேங்கிவிடுவதால், அந்த நாட்களில் பாதுகாப்பான பயணம் என்பதே கேள்விக்குறியாகி விடுகிறது. எனவே எங்கள் தெருவிற்கு சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.