பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே சோதனைச்சாவடியில் இருந்து டேன்டீ வழியாக செம்பக்கொல்லிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.