தார் சாலை அமைக்க கோரிக்கை

Update: 2022-08-04 07:06 GMT
 கோவளம் ஊராட்சிக்கு உட்பட்ட வேம்பால் சிவ சுடலை மாடசுவாமி சாலையானது அகஸ்தீஸ்வரம் காலேஜ் ரோட்டில் இருந்து பிரிந்து ஏழுசாட்டுபற்று என்ற கிராமத்திற்கு செல்கிறது. இந்த சாலையானது மிகவும் பழுதுபட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலையானது சீரமைக்கப்படவில்லை. இந்த சாலையில் உள்ள ஜல்லிகள் மண்ணின் பிடியின்றி உள்ளன. இந்தச் சாலையில் நடந்து செல்வதோ அல்லது வாகனங்களில் செல்வதோ மிகவும் கடினம். எனவே பாராளுமன்ற அல்லது சட்டசபை உறுப்பினர் பொருள் உதவி செய்து இந்த சாலையை தார்ச்சாலையாக சீரமைத்து தரும்படி வேண்டிக்கொள்கிறேன்

மேலும் செய்திகள்